அமித் ஷாவை சந்திக்கும் "திமுக கூட்டணி" எம்பிக்கள்..!! லிஸ்ட் இதோ.. காரணமே வேற லெவல்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நாளை பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை தமிழக அனைத்து கட்சிகள் எம்பி குழு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தான அறிக்கையை வழங்குவதோடு தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரணமாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஊழிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்திய நிலையில் நாளை தமிழக எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்


திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் உள்துறை அமைச்சர் அமைச்சவை நாளை சந்திக்க உள்ளனர். அமித் ஷாவை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திமுகவை சேர்ந்த டி.ஆர் பாலு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாக்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன், கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன், விசிகவை சேர்ந்த ரவிக்குமார், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ் கனி, கொங்கு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ் ஆகியோர் அடங்கிய திமுக கூட்டணி எம்பிக்கள் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Alliance MPs meet Amit Shah


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->