வரும் தேர்தலில் இவர்களுடன் கூட்டணி?.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதும் கட்சியின் சார்பாக ஆலோசனை நடத்தி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என பிரேமலதா தெரிவித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி கூட்டத்திற்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வருகை தந்திருந்தார். இதன்போது, மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " பெட்ரோல், கியாஸ், டீசல், அத்தியாவசிய பொருட்கள், மின்சார கட்டணம் விலை உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது. இதனை கண்டித்து தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வரும் 5 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது இயல்பானது. வெற்றியை கண்டு தேமுதிக ஆணவப்படவும் செய்யாது., தோல்வியை கண்டு துவண்டும் போகாது. தேமுதிக வலுவான கட்டமைப்பை உள்ளடக்கிய கட்சி ஆகும். கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கொண்ட நட்புறவும் என்றும் நிலைத்து நிற்கும். நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசியை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசுவது, அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அது தொடர்பாக கருத்துக்கள் கூற முடியாது. 

இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தற்போது வரை வெளியாகவில்லை. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும், கட்சியின் சார்பாக ஆலோசனை நடத்தி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Premalatha Vijayakanth Pressmeet at Madurai Airport 3 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->