காலியாக போகும் தேமுதிக கூடாரம்.? பிரேமலதா விஜயகாந்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை தேமுதிக, அமமுகவுடன் இணைந்து சந்தித்தது. தேமுதிகவிற்கு அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார், அந்த தொகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக தேமுதிக நிர்வாகிகள் கூறினார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவை சரியாக கையாளாததால், தேமுதிக தலைமை மீதும், பிரேமலதா மீதும் தேமுதிகவினர் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேமுதிக கூடாரம் காலியாகப்போகிறது என கூறப்படுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தான் முதலில் தேமுதிக நிர்வாகிகள் வேறு கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.

இனிமேல் தேமுதிகவில் இருந்தால் வேலைக்கு ஆகாது. எனவே மாற்று கட்சிக்கு தாவ நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை எனவும் தேமுதிக வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை எனவும் புலம்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk members may be join next partys


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->