சட்டமன்ற தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி பிளவு படுமா.? - அதிமுக.!  - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மீது தொடர்ந்த ஐந்து வழக்குகளை அதிமுக திரும்பப் பெற்றுள்ளது. 2012 முதல் 2014 வரை விஜயகாந்தின் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சனம் செய்ததாக 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்நிலையில், 2012ம் ஆண்டு தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரான கேபி முனுசாமி குறித்து மோசமாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Image result for அதிமுக-தேமுதிக SEITHIPUNAL

அதுபோலவே 2015 ஆம் ஆண்டில் தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது விஜயகாந்தின் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அதிமுக திரும்பப் பெற்றுள்ளது. முன்னதாக அதிமுக கட்சியின் மீது தேமுதிக போட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இரு கட்சிகளும் இந்த கூட்டணியை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கை இரு கட்சிகளும் திரும்ப பெற்றதன் காரணமாக அதிமுக தேமுதிக கூட்டணி தொடரும் என்று அதிமுக மறைமுகமாக தெரிவிக்கின்றது என்று பேசப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK AND ADMK WILL CONTINUE COALITION IN 2021 ELECTION


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal