''கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக உள்ளது''; டி.கே. சிவக்குமார்..!
DK Sivakumar says a helicopter is ready for Chief Minister Vijay to visit Karnataka's water bodies
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரம், தமிழ்நாட்டிலும் , கர்நாடகாவிலும் பேசும் பொருளாகியுள்ளது.
இந்த சூழலில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று சிறிதளவு நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் தான் ஆலோசனை நடத்தியுள்ளேன் என்றும், நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு இது குறித்து ஒரு முடிவை எடுப்போம் என்றும், அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழகத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் தனக்கு கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது எனவும் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
DK Sivakumar says a helicopter is ready for Chief Minister Vijay to visit Karnataka's water bodies