அமித்ஷாவால் எந்த வெற்றி வியூகத்தையும் தமிழகத்தில் வகுக்க முடியாது - திமுக அமைச்சா் எஸ். ரகுபதி!
DK Minister Say About BJP ADMk Alliance
திமுக அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் அதனால் எதுவும் நடைபெறாது; அவரால் எந்தவிதமான வியூகமும் அமைக்க முடியாது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாகவும் செழிப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள்; அதிருப்தி எதுவும் இல்லை என அவர் கூறினார். ஆளுநர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உணர முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலேயே மிகுந்த முன்னேற்றம் கண்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழக மாணவர்கள் தேசிய அளவில் உயர் கல்வியில் சாதித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.
அமலாக்கத் துறையின் சோதனைகள் குறித்து பேசும்போது, “சோதனை நடத்தும்போது அறைகள் பூட்டப்பட்டிருந்தால் உரியவர்களை அழைத்து பூட்டைத் திறக்க வேண்டும். ஏன் உடைக்க வேண்டும்? எத்தனை சோதனைகள் நடந்தாலும் திமுக அஞ்சப்போவதில்லை; சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் விடுதியில் சோதனை நடத்த வேண்டும் என்றால் செயலரின் அனுமதி அவசியம். அனுமதியின்றி அறைகளை உடைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு உரிமை இல்லை. அது அத்துமீறலாகும்; இதனை எதிர்த்து திமுக தொண்டர்கள் குரல் கொடுப்பார்கள் என்றார்.
English Summary
DK Minister Say About BJP ADMk Alliance