மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி அரசு மேல் முறையீடு.!! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் அரசு அதிகாரிகளை நியமனம் மற்றும்  நிர்வாகம் தொடர்பாக வழக்கில் சட்டம் ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகத் தொடர்பாக முடிவெடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகும் வகையில் டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் அமல்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டத்திற்கான  வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். 

அதேபோன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் இந்த அவசரச் சட்டம் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திறந்து எதிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கோரிக்கைக்கு தற்போது வரை காங்கிரஸ் கட்சி சேவை சாய்வதில்லை.

இந்த நிலையில் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் மேல்முறையீட்டு வழக்கிலும் அதேபோன்ற தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi govt appeals in Supreme Court against central govt


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->