பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்று., விவசாயிகள் போட்ட பக்கா பிளான்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

சமீபத்தில் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 1½ஆண்டு நிறுத்தி வைக்க மத்திய அரசு முன்வந்த நிலையில், அதனை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பிப்ரவரி 1-ந்தேதி டெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என்று அறிவித்துள்ளனர்.

இதனை கிராந்திகரி கிஷான் யூனியனின் தர்ஷன் பால் அறிவித்துள்ளார். 

விவசாயிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கால்நடையாக பேரணி நடத்தும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தக்கல் செய்ய உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi farmers protest feb 1


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->