அதிமுக விவகாரம் || சமூகமாக பேசி தீர்க்க அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு!
Delhi BJP directs Annamalai to discuss and resolve AIADMK alliance issue
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்தியாவில் மிக முக்கிய கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருப்பது தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பவன் கல்யாண் எதிர்வரும் தெலுங்கானா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலிலும் பாஜக தோல்வியடைந்தது.

இதனால் தென்னிந்தியாவில் பாஜகவில் செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பணி மற்றும் தொகுதி பங்கிட்டுக்கு முன்பு அதிமுகவுடன் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்கப்படும் டெல்லி பாஜக தலைமை விளக்கம் அளித்துள்ளது.
மாநில அளவில் பிற கட்சிகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே கட்சிகளிடையே சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் தமிழக பாஜக தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக இடம் பெற்று தேர்தல் களத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசி தீர்க்க தமிழக பாஜக தலைமைக்கு டெல்லி பாஜக தலைமை மாநில பாஜக தலைமைக்கு உத்தரவாக பிறப்பிக்கும் என பாஜகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் டெல்லி பாஜக தலைமை கூடிய விரைவில் அதிமுக தலைமையுடன் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்கலாமா வேண்டாமா என ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Delhi BJP directs Annamalai to discuss and resolve AIADMK alliance issue