#BREAKING | உண்ணாவிரதம், அடுத்து ராஜினாமா - தலைமையை எச்சரிக்கும் திமுக கவுன்சிலர்கள்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாநகராட்சியில் 10 திமுக கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் ஜனவரி 30 ஆம் தேதி தங்களது வார்டுகளில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர்.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட விட்டால் ராஜினாமா செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாநகர மேயராக திமுகவைச் சேர்ந்த சுந்தரி ராஜா இருந்து வரும் நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

சுந்தரி ராஜாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பு கவுன்சிலர்களும் எதிராக ஒரு தரப்பு கவுன்சிலர்களும் செயல்பட்டு வருகின்றனர். எதிராக செயல்படும் கவுன்சிலர்கள் திமுக எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என பலமுறை குற்றம் சாட்டியும் திமுக தலைமை மேயர் மீது நடவடிக்கை எடுக்காததால் திமுக தலைமையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 31ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் படத்த போவதாகவும் அதனையும் மீறி நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாகவும் திமுக கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore DMK counsellors deside to resign post


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->