தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. நேரில் சென்ற சண்முகம் தமிழக அரசுக்கு சொன்ன செய்தி!
CPIM Shanmugam Chennai protest DMK
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6-ஆம் மண்டலங்களில் குப்பை அகற்றும் பணி மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகள் சமீபத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, இதுவரை மாநகராட்சியுடன் இணைந்து பணிபுரிந்த சுமார் 2000 பேர், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தனியார்மயப்படுத்தலை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி போராடி வருகிறார்கள். இன்று இந்த போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். மேலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
English Summary
CPIM Shanmugam Chennai protest DMK