மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்.. இறைவனிடம் பிராத்தனை செய்யும் ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கமலஹாசன் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தனது முகநூல் பக்கத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இருப்பதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கமலஹாசன் அவர்கள் விரைவில் கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப த.மா.கா சார்பில் இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona for kamalhaasan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->