மண்ணை கவ்விய காங்கிரஸ்.,ராயப்பேட்டைக்கு வண்டியை விடும் விஜய்! திமுக எடுத்த திடீர் முடிவு! பரபரக்கும் அரசியல் களம்!
Congress which has won the election will field Vijay in Royapettah DMK sudden decision The political arena is in turmoil
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் தரப்பு எதிர்பார்த்திருந்தாலும், தேசிய காங்கிரஸ் தலைமையின் தெளிவான முடிவால் அந்த வாய்ப்பு முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 2026-ல் திமுக கூட்டணியை விட்டு பிரியாது என்ற முடிவு, விஜய்க்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதனால் TVK புதிய விருப்பத்தை ஆராய தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய் தீவிரமாக பரிசீலித்து வருகிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆந்திர அரசியலில் பாஜக–தேசம்–ஜனசேனா இணைந்து ஜெகன் அரசு வீழ்த்திய ‘ஆந்திர மாடல்’ தற்போது விஜய்க்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுகவை வீழ்த்த பாஜக–அதிமுக–TVK போன்ற கூட்டணி உருவாகலாம் என்ற விவாதமும் நடந்ததாக கூறப்படுகிறது.
விஜய்க்கு சிறுபான்மை வாக்குகள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆதரவு இருப்பதால், பாஜகவுடன் நேரடியாக இணைவது சிக்கலை உருவாக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுகவுடன் நேரடி கூட்டணி அமைந்தால், திமுகக்கு எதிரான வாக்குகள் ஒருங்கியதாகும் என்றும், விஜய் நேரடியாக முதல்வர் போட்டியில் இறங்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் அவரது தரப்பு கருதுகிறது.
மறுபுறம், காங்கிரஸ் தனது 25 தொகுதி திட்டத்திலேயே நிலைத்திருப்பதால், TVK–காங்கிரஸ் கூட்டணி தள்ளிப் போகும் நிலையில் உள்ளது. இதனால் விஜய்–ராகுல் சந்திப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், விஜய் அதிமுகவுடன் பேரம் பேசும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், விஜயின் கூட்டணி முடிவு 2026 தேர்தலின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Congress which has won the election will field Vijay in Royapettah DMK sudden decision The political arena is in turmoil