செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வு.. பாஜகவிற்குத் தெரியாமல் சாத்தியமில்லை - காங்கிரஸ் கேள்வி..!! - Seithipunal
Seithipunal



இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 நிறுவனங்களும் ஒரே நேரத்தில் கட்டணத்தை உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மேற்கண்ட மூன்று நெட்ஒர்க்குகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சுமார் 42 கோடி பேர் ஜியோவையும், 39 கோடி பேர் ஏர்டெல்லையும், 22.37 கோடி பேர் வோடபோன் நெட்ஒர்க்கையும் பயன்படுத்தி வருகின்றனர். மோடி 3ஆவது முறையாக பதவியேற்றும் தனியார் முதலாளிகளுக்குத் தான் தாராளம் காட்டி வருகிறார். 

முதலில் ஜியோ நிறுவனம் ஜூன் 27ம் தேதி கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் ஜூன் 28 அன்று கட்டண உயர்வை அறிவித்தது. இதையடுத்து ஜூன் 29 அன்று வோடபோன் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வெறும் 72 மணி நேரத்தில் மேற்கண்ட 3 நிறுவனங்களும் கூட்டாக இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது இதன் மூலம் புலனாகிறது. 

இந்த கட்டண உயர்வால் இந்தியாவில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்களிடமிருந்து ரூ. 34 ஆயிரத்து 824 கோடி வரை கூடுதல் லாபம் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கவுள்ளது. இந்த அளவு கட்டண உயர்வை தனியார் நிறுவனங்கள் எப்படி தன்னிச்சையாக அறிவிக்க முடியும்?

இதுகுறித்து மோடி அரசும், TRAI அமைப்பும் எதுவும் கருத்து கூறாதது ஏன்? இந்த கட்டண உயர்வு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் அறிவிக்கப்படுவதன் ரகசியம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை காங்கிரசின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பியிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Questioned About Cell Phone Companies Rate Hike


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->