திமுக-காங்கிரஸ் முடிந்தது சோலி.! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.! அதிர்ச்சியில் திமுக.! - Seithipunal
Seithipunal


திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட பேச்சு வார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் என்று தொகுதி பங்கீடு பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்து நடந்தஇரண்டாம் கட்டமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவிக்கையில், 

"திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளோம். இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் சுமுகமாக நடந்து உள்ளது. விரைவில் மேற்கொண்டு என்ன செய்வது, எப்படி நடத்துவது, எவ்வளவு தொகுதியில் என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். நாளை அல்லது நாளை மறுநாள் இறுதியாக அறிவிப்போம்." என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "திமுக கொடுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்று கொண்டு கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது மாவட்ட தலைவர்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளது.

நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரசை கழட்டிவிடும் நோக்கில் திமுக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழ., தற்போது காங்கிரஸ் கருத்து கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கமல் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS need more seat or alliance cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->