"நீங்க அதிமுக அனுப்பிய ஆளா?" மக்களை நோக்கி வேளச்சேரி எம்எல்ஏ கேள்வி.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர் முழுவதும் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வழியாத காரணத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியானதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

 புயல் மற்றும் வெள்ளம் பாதிப்பு காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படாததாலும், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படாததாலும் நேற்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று சென்றபோது அவரை சுற்றி வளைத்த பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது பொது மக்களை நோக்கி "நீங்க அதிமுக அனுப்பிய ஆளா?" என காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களை தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக இவர் வேளச்சேரி ஏரியின் உயரத்தை அதிகரிக்கும் போது ஊருக்குள் தண்ணி வரத்தான் செய்யும், அதனை ஏற்க வேண்டும். தண்ணீ கடலுக்கு போகும்போது, அது ஏத்துகலனா நாம என்ன பண்ணமுடியும் என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MLA surrounded by public video goes viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->