#Breaking :: சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி! உருட்டு கட்டையால் தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வந்த மாநிலத் தாவி தலைவர் கே எஸ் அழகிரி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் 72 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய ஜெயக்குமார் நெல்லை மாவட்டத்தில் வட்டார தலைவர்கள் நியமனத்தில் குளறுபடி செய்வதாகவும் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்களை நியமனம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன் காரணமாக நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்க கோரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். இன்று காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கேஸ் அழகிரி தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனின் வாயிலில் நுழைந்து கே.எஸ் அழகிரியை முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்பொழுது போராட்டக்காரர்களை நோக்கி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களிடையே வாக்குவாதம் செய்தார். கே.ஸ் அழகிரி நோக்கி கேள்வி எழுப்பிய நிர்வாகிகளை கன்னத்தில் அறைந்து வெளியே போகும்படி கூறிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.

இதனை நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் தொடர்களின் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினரும் உருட்டு கட்டைகளால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவன் போர்க்களமாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress membes attacked with sticks in Chennai Congress office


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->