நீட் விவகாரத்தில் "திமுக முட்டுக் கொடுத்த காங்கிரஸ் இன்று வேறு கூட்டணியில்": திண்டுக்கல் லியோனியின் அதிரடி பேச்சு!
Congress is Now in a Different Alliance Dindigul Ieoni Criticizes Past Tieup Over NEET
திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முன்னாள் தலைவருமான திண்டுக்கல் லியோனி, பொதுக்கூட்டம் ஒன்றில் நீட் (NEET) தேர்வு மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் மீது விமர்சனம்: "கடந்த காலங்களில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால், அதற்கெல்லாம் நாம்தான் (திமுக) காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒட்டுமொத்தமாக எல்லோரும் நம்மை (திமுக அரசை) நோக்கிக் குற்றம் சாட்டினார்கள்."
மாறிய கூட்டணி: "அப்படி நாம் தாங்கிப் பிடித்த, நமக்காகப் பேசிய அதே காங்கிரஸ் கட்சி, இன்று நம்மை விட்டுவிட்டு முற்றிலும் வேறு ஒரு கூட்டணியில் போய்ச் சேர்ந்துள்ளது" என்று திண்டுக்கல் லியோனி ஓப்பனாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
Congress is Now in a Different Alliance Dindigul Ieoni Criticizes Past Tieup Over NEET