1967க்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? சத்தமில்லாமல் காய் நகர்த்திய பிரவீன் சக்கரவர்த்தி!அமைச்சரவையில் 2 கதர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பல தசாப்தங்களுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1967ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை இடம் வழங்குவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ராகுல் காந்தி விஜய்யின் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்றதும் குறிப்பிடப்படுகிறது.

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 1967க்கு பிறகு காங்கிரஸ் பங்கேற்கும் அமைச்சரவை உருவாகும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைவதற்கு தேவையான ஆதரவை திரட்டுவதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ராகுல் காந்தியும் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்கள் அமைச்சரவைப் பட்டியலில் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேநேரத்தில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் குழப்பமும் தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது. எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவு, விஜய் அரசுக்கு ஆதரவாக நகர்ந்து வருவதாகவும், சுமார் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த அணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக அதிருப்தி அணியும் தவெக தரப்பும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சில தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் இடைத்தரகர்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், லீமா ரோஸ் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவைப் பொறுப்பும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கட்சியில் இருந்து 2/3 பங்கு எம்.எல்.ஏக்கள் பிரிந்தால் மட்டுமே கட்சி தாவல் தடுப்பு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதால், தற்போதைய அரசியல் கணக்குகள் மேலும் சிக்கலாகியுள்ளன.

தமிழக அரசியலில் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த கூட்டணி கணக்குகள், வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. 1967க்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress in the Tamil Nadu cabinet after 1967 Praveen Chakravarthy silently moved the pieces 2 Kathars in the cabinet


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->