தேர்தல் ஆணையர் வாக்குத் திருடர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
Congress Election Commission
காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதை விமர்சித்துள்ளது.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தின் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடைபெற்றதாகவும், வாக்குத் திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையம் “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என நிராகரித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “குற்றச்சாட்டுகளை மறுப்பதே தவிர தேர்தல் ஆணையம் எங்களுக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. எங்கள் வேட்பாளர் கேள்விகளை எழுப்பியதால் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் தேர்தல் ஆணையம், கர்நாடக சிஐடி-க்கு ஒத்துழைக்கவில்லை. சிஐடி 18 முறை தரவு கோரி மனு அளித்தும் பதில் இல்லை” என்றார்.
மேலும், “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். நாங்கள் பிரச்சினையை எழுப்புவது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை காக்கவே. வெற்றி தோல்வி எங்களுக்கு இரண்டாம் பிரச்னை. ஜனநாயகமே பாதிக்கப்படக்கூடாது என்பதே முக்கியம்.
ஆனால் ஆட்சியாளர்கள் இந்தியாவை நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நிலைக்கு தள்ள முயற்சிக்கிறார்கள். 2014க்கு முன்பு இந்தியாவை பார்த்து அண்டை நாடுகள் கற்றுக்கொள்ள விரும்பின. இன்று அவர்கள் போன்று ஆக வேண்டுமென்ற எண்ணமே சிலருக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
English Summary
Congress Election Commission