கர்நாடகா தேர்தல் : பெரும்பான்மையுடன் காங்கிரஸ் முன்னிலை.. சென்னையில் நிர்வாகிகள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் தற்பொழுது காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

பாஜக 85 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 27 இடங்களிலும் முன்னிலை வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கர்நாடக தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி தற்போது வரை காங்கிரஸ் கட்சி 45.36% வாக்குகளும், பாஜக 38.19% வாக்குகளும், மதசார்பற்ற ஜனதா தளம் 8.66% சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னை காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress celebration in Chennai for Karnataka assembly election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->