"ஊழல்வாதிகள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை" - வெளிப்படையான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் விஜய் தீவிரம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வரலாற்றில் வழக்கமாக அரங்கேறும் 'பழிவாங்கும் அரசியல்' என்ற பொதுப் பிம்பத்தை உடைத்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது முறையான விசாரணை நடத்தித் தண்டனை பெற்றுத் தருவதில் முதலமைச்சர் விஜய் தீவிரக் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாறிவரும் அரசியல் நகர்வுகள்

கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சமயங்களில், ஒருவருக்கொருவர் மாற்றுத் தரப்பினர் மீது வழக்குகளைப் பதிவு செய்தாலும், அவை பெரும்பாலும் இறுதி நிலையை எட்டாமல் கிடப்பில் போடப்படுவதே வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு, வெறும் வழக்குப்பதிவோடு நின்றுவிடாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் வலுவான குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, சமீபத்தில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனைகள் பார்க்கப்படுகின்றன.

மக்களைக் கவர மாற்று வியூகம்

தற்போதைய சூழலில் நிலவி வரும் கடுமையான நிதிச் சிக்கல்கள் காரணமாக, தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக முழுமையாக நிறைவேற்றுவதில் அரசுக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனைச் சமாளிக்கவும், மக்களின் நம்பிக்கையைப் பெறவும் முதலமைச்சர் விஜய் ஒரு புதிய நிர்வாக வியூகத்தைக் கையாண்டு வருகிறார். நிதி சார்ந்த நலத்திட்டங்களுக்கு இணையாக, நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து மக்கள் மனதை வெல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

ஊழல்வாதிகள் மீது எடுக்கப்படும் இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் கவனத்தை சட்ட ரீதியான தற்காப்பு நோக்கித் திருப்பிவிட்டு, மறுபுறம் எவ்வித அரசியல் இடையூறுகளும் இன்றி அரசு நிர்வாகத்தில் உள்ள தேக்கநிலையை உடைத்து, பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கத் தவெக தலைமை திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay Stresses on Legal Action and Convictions in Corruption Cases


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->