இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!!
cm stalin meeting on chennai
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பருவமழையால் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருடன் உரையாற்றுகிறார்.
இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கும். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
English Summary
cm stalin meeting on chennai