சூடுபிடித்துள்ள அரசியல் களம்: ஒரே நாளில் ஒரே தொகுதியில் ... பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ்!
cm Stalin EPS campaign in Thoothukudi
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் மக்களைச் சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கிடையே கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து இன்று மாலை 5மணிக்கு எட்டயபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி வந்தார். இதேபோல் தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடி, சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் ஒரே நாளில் தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
English Summary
cm Stalin EPS campaign in Thoothukudi