ஜல்லிக்கட்டு போட்டிகளில் பலியான மூவருக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த திரு.கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த திரு.பூமிநாதன் (வயது 52) மற்றும், 

தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த திரு.கோகுல் (வயது 14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Announce Jallikattu death relief fund


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->