செந்தில் பாலாஜியின் வழக்கு.. முட்டுக்கட்டை போட்ட ED.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க கோரியும் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை மே 15ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 

எனினும் அதனைப் புறந்தள்ளிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்ததோடு அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். 

முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற காவல் 34வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court Postponed Senthil Balaji case to may15


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->