கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி சொன்ன பொய்களுக்கும் எத்தனைப் புத்தகங்கள் போட வேண்டும்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
ADMK EPS reply to DMK MK Stalin
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "இன்றைய தினம், புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான நமது கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து முடித்தவுடன்,
தேர்தல் பிரச்சாரக் கூட்டமா? தேர்தல் வெற்றி மாநாடா? என்று வியக்கும் வண்ணம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் திரண்டு நின்ற பொதுமக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
நான் பேசும் பொய்களுக்கு புத்தகம் போடலாம் என்கிறார் ஸ்டாலின்.
அப்படி பார்த்தால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக இவர்கள் கூறிய அத்தனை பொய்களுக்கும் எத்தனைப் புத்தகங்கள் போட வேண்டும்?
5 ஆண்டுகால ஆட்சியில், தினமும் டிப்-டாப்பாக வித விதமான சட்டைகளைப் போட்டுக் கொண்டு, ஊடக பத்திரிகைகளுக்கு வெறும் போட்டோஷூட் Content கொடுத்து வலம் வந்தவர் தானே ஸ்டாலின்?
யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கும் ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி இனியும் தேவையில்லை என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS reply to DMK MK Stalin