முதலமைச்சர் கேட்ட 'ஒற்றை கேள்விக்கு' பதிலளிக்க முடியாமல் தெறித்து ஓடிய திமுக கூட்டணி எம்.எல்.ஏ-க்கள்!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் பின்னர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தமிழக சட்டசபை கூட்டம் கூடவில்லை. 

நான்கு மாத இடைவெளிக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக சட்டசபை கூட்டம் . ஜூலை 1 ஆம் தொடங்கி தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது

ஜூலை 1 ஆம் தொடங்கி நடைபெற்று வரும் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில்.

நேற்றைய  கூட்டத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேகதாது அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறியதற்க்கு காங்கிரஸ் திமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன, மேலும் மேகதாது அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறியதற்க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பாதது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி காங்கிரஸ் எம்.ல்.ஏக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

முதல்வர் கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று விளக்கமளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm palanisamy speak about rahul gandhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->