நாடாளுமன்ற மேசைகளுக்கு நடுவே சிகரெட்டா...? அரசியல் அரங்கில் வெடித்த புதிய சர்ச்சை...!
Cigarettes among parliamentary tables new controversy erupted political arena
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை வளாகத்துக்குள் புகை பிடித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர்மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் மக்களவைக்குள் சிகரெட் புகைத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பாஜக எம்.பி அமித் மால்வியா தனது எக்ஸ் (X) தள பதிவில், குற்றச்சாட்டுக்குள்ளானவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கீர்த்தி ஆசாத் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பயன்படுத்தி அவைக்குள் அமர்ந்தபடியே புகை பிடித்ததாக கூறி, அதற்கான வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளார்.
புகை பிடிப்பது சட்டவிரோதம் அல்ல என்றாலும், நாடாளுமன்றத்தின் புனிதமான வளாகத்திற்குள் இத்தகைய செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது நாடாளுமன்ற மரபுக்கும் ஒழுக்கத்துக்கும் எதிரானது என்றும் அமித் மால்வியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டு நாடாளுமன்ற அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Cigarettes among parliamentary tables new controversy erupted political arena