காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்..!
Chief Minister Vijay met Congress leaders Rahul Gandhi and Sonia Gandhi
தமிழகத்தில் திமுக ஆட்சியை தோல்வியடைய வைத்து கடந்த மே 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர், கடந்த மே 27-ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், 03 நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று 02-வது முறையாக டெல்லி சென்றுள்ளார். நாளை (ஜூன் 11) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நடைபெறுகிறது. அதில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதோடு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

முன்னதாக கடந்த முறை டெல்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி வேறு பணியில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
English Summary
Chief Minister Vijay met Congress leaders Rahul Gandhi and Sonia Gandhi