கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்: 10 பேர் உயிரிழப்பு; ஆட்சியரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர்..!
Chief Minister inquires about the situation with the Collector regarding the crowd at the Karur Vijay campaign
தவெக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் மயக்கமடைந்து அருகில் உள்ள கரூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில் இவர்கள் உயிரிழந்துன்னர். சுமார் 30 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதற்கிடையே, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கரூர் ஆட்சியரை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
English Summary
Chief Minister inquires about the situation with the Collector regarding the crowd at the Karur Vijay campaign