இடியாய் இறங்கிய செய்தி.! பொன்முடி விடுதலையான வழக்கில் மறு விசாரணை.!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக நிரூபிக்கவில்லை, குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற அடிப்படையில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோரை கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணை எடுத்துள்ளது. தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆனந்த் வெங்கடேஷ் இருந்து வரும் நிலையில் அவர் தாமாக முன்வந்து அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வில் இன்று 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குறிப்பு வழக்கின் மறுவிசாரணை வழக்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை பட்டியல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமைச்சர் பொன்முடி மீதான இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் அல்லது மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஏன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையின் போது லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அமைச்சர் பொன்முடி தரப்புக்கும் தெரிவிப்பார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு நோட்டீஸ் பிறப்பித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC retrial against Ponmudi acquittal in asset hoarding case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->