#BREAKING || மொத்தம் 17 பக்க உத்தரவு.!! வசமாக சிக்கிய பொன்முடி.!! உயர் நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் போதிய ஆதாரம் மற்றும் சாட்சியங்கள் இல்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்தது.

வேலூர் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்  சீராய்வு செய்ய தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது "அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மிகவும் மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளது

இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். தாமாக எடுத்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு ஆணையிடுகிறேன்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி. அந்த நோட்டீசுக்கு அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வரும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எதன் அடிப்படையில் இந்த வழக்கு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறித்து 17 பக்க விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதனை லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி தரப்பு விரிவாக படித்து ஆராய்ந்து அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், இந்த தீர்ப்பின் முழு விவரம் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து மதிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி "நான் பார்த்தவற்றில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC orders Ponmudi and DVAC to respond in asset hoarding case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->