சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் - கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி - நயினார்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள்!

விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன.

இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி!

எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai tn law and order bjp nainar condemn dmk govt


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->