மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு! சிக்கினார் சூர்யா! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், 'கீழ்சாதி உடம்புக்குள் ஓடுறது சாக்கடையா, மேல் சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கயா' என்ற வரிகள் இடம் பெற்று இருந்தது. 

இந்த பாடலுக்கு பல்வேறு சமூகத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது. சூர்யாவுக்கு கடும் கண்டனங்களையம், கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும்  இணையதளத்தில் பலரும் தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக சாதிக் கலவரங்கள் ஏதும் இல்லாமல், மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் மேல்சாதி கொம்பு, கீழ்சாதி சாக்கடையா என்று சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பாடல் எடுத்து அதற்கு சூர்யா நடனமாடுவது எல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி பலரும் வைத்துள்ளனர்.

தமிழக மக்கள் மேல்சாதி, கீழ்சாதி என்ற வார்த்தையையே மறந்து விட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது பொறுப்பான திரைத்துறை மேல்சாதி, கீழ்சாதி, சாக்கடை என்று எழுதுவதெல்லாம் சாதிக் கலவரத்திற்கு தூண்டுவதே இவர்களின் திட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இப்படி கீழ்சாதி, மேல்சாதி என்ற பாடலில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள சூரரைப்போற்று படத்தால் சாதி கலவரங்கள் ஏற்படும் என்பதால், வரும் 2022ஆம் ஆண்டு வரை இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் கார்த்திக்கின் இந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது மீது தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முன்பு, காவல்துறை தரப்பில் 'மனுதாரரின் புகார் மனு காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அவர்கள், 'காவல் கண்காணிப்பாளர் மீண்டும் புகார் மனுவை மனுதாரர் அளிக்க அறிவுறுத்தி, இந்தப் புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு தடை ஏற்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHENNAI HC ORDER TO SOORARAI POTRU SONG ISSUE


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->