மத்திய சென்னை || 4 முனை போட்டி உறுதி.. லிஸ்டை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.!!
Central Chennai constituency candidate nomination accepted
மக்களவைப் பொதுத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.
அதேபோன்று திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீண்டும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில நிர்வாகி வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகேயன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்களின் வேட்பு மனுக்களையும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் நான்கு பேரின் வேட்பு மனுக்களையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் மத்திய சென்னை தொகுதியில் நான்கு முனை போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
Central Chennai constituency candidate nomination accepted