அதிமுக அலுவகத்தில் பரபரப்பு! குவிந்த அதிமுக தொண்டர்கள்! எடப்பாடி பழனிச்சாமி மீது விழுந்த செல்போன்! - Seithipunal
Seithipunal


நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் கடும் தோல்வியை சந்தித்தது. எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல், சில இடங்களில் 3-ம் இடத்துக்கு தள்ளி, டெபாசிட் இழந்த நிலையிலான இந்த பின்னடைவு, கட்சியை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கடந்த காலங்களில் 40 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்திருந்தது என நினைவூட்டினார். ஆனால், தற்போது கட்சி 10 சதவீத வாக்குகளை இழந்து விட்டது, அதை மீண்டும் கைக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என அவர் தெரிவித்தார். 

முன்னதாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, புதிய எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக ஒரு செல்போன், எடப்பாடி பழனிசாமியின் தோளில் விழுந்தது. இதனால் அவர் சிறிது அதிர்ச்சியடைந்தார், அங்கு இருந்த நிர்வாகிகள் உடனடியாக யாருடைய செல்போன் என்பதை கண்டறிய முயன்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phone fell on Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->