ஜாதி பெயரை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்ட அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு..!
Case filed against AIADMK's Dindigul Srinivasan for campaigning by citing caste names
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஏப்ரல் . 10-ஆம் தேதி முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கி நாயக்கன்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் அந்த ஊரில் பெருபான்மையாக உள்ள ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பிரசாரம் செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஜாதி பெயரை குறிப்பிட்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக, வேல்முருகன் என்பவர் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் பி.என்.எஸ். 196(1) பிரிவின் கீழ் போலீசார் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Case filed against AIADMK's Dindigul Srinivasan for campaigning by citing caste names