அமித்ஷாவுடன் பேசியது வெளியிட முடியாது – என்டிஏவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்! அண்ணாமலை குடுத்த பரபரப்பு பதில்!
Cannot publish what he spoke to Amit Shah OPS TTV Dhinakaran in NDA Annamalai sensational response
என்டிஏ கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமித்ஷாவை சந்தித்து திரும்பிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முக்கியமான விளக்கத்தை வழங்கியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமித்ஷா, நட்டா போன்றோருடன் நடந்த உள்ளரங்கு ஆலோசனைகளைக் பொதுவெளியில் பகிர முடியாது”
என்று தெளிவுபடுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தது தொடர்பாக எழுந்த அரசியல் ஊகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.
“அவர்களைச் சந்தித்தது முற்றிலும் நட்பு ரீதியிலானது. டிடிவி தினகரன் என் சொந்த ஊருக்கு வந்ததால், இரவு உணவுக்கு அழைத்தேன். அதற்கு மேல் அரசியல் அர்த்தம் ஒன்றும் இல்லை”
என்று கூறினார்.
அண்ணாமலை மேலும் வலியுறுத்தியது,என்டிஏ கூட்டணியில் யார் வர வேண்டும், வரக்கூடாது என்பதற்கான தீர்மானத்தை தேசிய தலைமை மட்டுமே எடுக்கும் என்பது. கூட்டணியின் தமிழ்நாடு நிலையைப் பற்றி எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
2026 தேர்தலை முன்னிட்டு தேமுதிக, பாமக போன்ற பல கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வராத சூழலில்,“என்டிஏ வலிமையாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக உள்ளரங்கில் நான் என்னுடைய கருத்துகளை சொல்ல முடியும். ஆனால் இறுதி முடிவு எடுக்கும் இடத்தில் நான் இல்லை”என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்றாவது சக்தியாக எழுவது எளிதல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.“இங்கு 3வது அணி 2வது இடத்திற்கும் வர விடமாட்டார்கள். அதனால் கிராஸ் வோட்டிங் அதிகம் நடக்கும். கேரளாவின் நிலைமையே அதற்கு உதாரணம்”என்றும் கூறினார்.
டிசம்பர் 15ஆம் தேதி அமித்ஷா சென்னை வர இருப்பதால், என்டிஏ கூட்டணியில் பெரிய மாற்றங்கள், விரிவாக்கங்கள் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.
English Summary
Cannot publish what he spoke to Amit Shah OPS TTV Dhinakaran in NDA Annamalai sensational response