அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் எம்.பி., பேட்டி.! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் எம்.பி., தெரிவித்ததாவது, 

"கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது, விவாதம் செய்யலாம் முடிவு எடுக்கக் கூடாது, என்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு மற்றும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை நடக்க உள்ளது.

இந்த நிலையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இன்றைக்கு இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதை அந்த கட்சியினுடைய சம்பந்தப்பட்ட விவகாரம். அதில், நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். ஒரு நீதிமன்றம் எப்படி இதை பேசுங்கள், இதை பேசக்கூடாது என்று சொல்ல முடியும். 

அப்படி சொல்லப்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு என்பது தவறானது. அதன் மீது எடுக்கப்படுகின்ற அவமதிப்பு வழக்கு என்பது அதைவிட தவறானது. ஆகவே அந்த தீர்ப்பை நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். 

வருகின்ற 11ஆம் தேதி நடக்கின்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவு அளிக்கவில்லை. அந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறலாம். அதன் மீது ஏதேனும் ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்றால் தனி நீதிபதி அமர்வு நீதிமன்றத்தில் நீங்கள் முறையிட்டுக் கொள்ளலாம்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை  இரண்டு வார காலம் தள்ளி வைத்திருக்கிறது" என்று சி வி சண்முகம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

C V SHANMUGAM SAY ABOUT SC CASE ADMK OPS VS EPS ISSUE


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->