நாங்க குடுக்குறத வாங்கிக்கோங்க..இல்லைனா உங்க இஷ்டம்! கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டும் திமுக! குமுறும் கூட்டணி கட்சி தலைகள்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் தங்களது பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்த முறை பல முனைப்போட்டிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு அதிக கவனம் பெற்றுள்ளது.

திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன. கனிமொழி தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கம்போல் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க திமுக முயற்சி செய்து வருகிறது.

தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக), விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலை விட கூட்டணி விரிவடைந்துள்ளதால், தொகுதி பங்கீட்டில் சிக்கல்கள் எழலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், பிற கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 35 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அந்தத் தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

இம்முறை திமுக சுமார் 170 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு தலா சில தொகுதிகள் வழங்கும் திட்டமும் பேசப்படுகிறது. சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 1 முதல் 5 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட இம்முறை குறைவான தொகுதிகளை ஏற்க வேண்டும் என்பதையும், சில இடங்களில் திமுக சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதையும் திமுக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுக விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணியில் தொடர முடியும் என பேச்சுவார்த்தை குழு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், பழைய கூட்டணி கட்சிகளின் தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

தொகுதி பங்கீடு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை கூட்டணிக் கணக்குகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

buy the drink or whatever you want DMK shows no mercy to the coalition parties Coalition party leaders are angry


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->