மத்திய அரசுக்கு உரிமை உள்ளது! திறப்பு விழாவை வரவேற்ற பகுஜன் சமாஜ்! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய அரசுதான் கட்டியது, அதனை திறக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும், அவரை அழைக்காமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க கூடாது என்று, நாடு முழுவதும் உள்ள 20 எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 20 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் குடியரசு தலைவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால், சாதிய ரீதியாக ஒதுக்கப்படுவதாகவும் மத்திய அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பிரதமர் மோடி திறக்கலாம் என்று, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான காட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சி தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், பாஜக ஆட்சி நடந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், நாட்டினுடைய நலம் சார்ந்த விவகாரங்களில் அரசியலை தவிர்த்து, மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கும். 

அந்த வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP support New Parliament open Central Govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->