வீரம், சமத்துவம், சமூக நல்லிணக்கம்…! - வேலு நாச்சியாரை போற்றிய ஆதவ் அர்ஜுனா
Bravery equality and social harmony Adhav Arjuna praised Velu Nachiyar
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வீரத்தையும் வரலாற்றுப் பெருமையையும் நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் உருக்கமான புகழாரப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “தமிழ் நிலத்தின் பேரரசி, இந்தியத் திருநாட்டின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலு நாச்சியார்.

தாய் மண்ணின் மரியாதையை காக்க தன்னிகரற்ற போராட்டத்தை வழிநடத்தியவர். சமத்துவ அடிப்படையிலான ஆட்சியை மக்களுக்கு வழங்கிய சரித்திரப் புகழ் கொண்டவர்.
சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்த உயர்ந்த பண்பாளர்” என வர்ணித்துள்ளார்.
மேலும், “பல மொழிகளில் பேசும் ஆற்றல், நிர்வாகத் திறன், போர் வியூக அறிவு உள்ளிட்ட பல்துறை பேராளுமையாக அவர் திகழ்ந்தார்.
எங்கள் கொள்கைத் தலைவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான இந்நாளில், அவரது வீரத்தையும் தொலைநோக்குத் தலைமையையும் அனைவரும் போற்றுவோம்” என்றும் ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Bravery equality and social harmony Adhav Arjuna praised Velu Nachiyar