மதுரையில் பா.ஜ.க. பிரசார சுற்றுப்பயணம்: நிர்மலா சீதாராமன் மற்றும் அதிமுகவின் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றன. 

ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தமிழக முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின்குறைபாடு களையும் தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.

இன்று மாலை மதுரையில் பா.ஜ.க.வின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற கருப்பொருளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி வைக்கிறார். அத்துடன், வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

அந்த வகையில் பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பலரும் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு கழகத்தில் மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJPs campaign tour in Madurai Participation of Nirmala Sitharaman and AIADMK


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->