அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக - தமிழகத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடாததற்கு காரணம் என்ன? 
                                    
                                    
                                   bjp revealed candidates list for election
 
                                 
                               
                                
                                      
                                            மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடபட்டுள்ளது. இதனை அந்தக் கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார். 
அதாவது, மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த முறை தேர்தலில் திரை நட்சத்திரங்களுக்கு கணிசமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு விதீஷா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. 
பல முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                                     
                                 
                   
                       English Summary
                       bjp revealed candidates list for election