கட்டப் பஞ்சாயத்து பண்றது எங்க வேலை இல்லை! கவுதமிக்கு ராம் சீனிவாசன் பதிலடி!! - Seithipunal
Seithipunal


நடிகை கவுதமி இன்று காலை வெளியிட்டிருந்த அறிவிப்பில் 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நான் கனத்த இதயத்துடன் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அழகப்பன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை அணுகியதாகவும், ஒரு கை குழந்தையுடன் கணவனின்றி ஒரு தாயாகவும் இருந்த என்னை அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல் நடித்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலையில் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்து இருந்ததாகவும், சமீபத்தில் அவர் என்னை மோசடி செய்ததை கண்டுபிடித்தேன் எனவும், எனது மகளை அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக பார்த்துக் கொள்வது போல் நடித்து ஏமாற்றிவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார் கவுதமி. 

இந்த விவகாரத்தில் பாஜகவின் பல மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் நான் உணர்ந்த போது உடைந்து போய் இந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். நில மோசடி புகாரில் சிக்கியுள்ள அழகப்பனுக்கு பாஜக நிர்வாகிகள் உதவியதாக கவுதமி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்வது கட்சியின் வேலை இல்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்த தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் "கவுதமியின் எந்த அரசியல் பணிக்காக கட்சித் துணை நிற்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நிலத்தை அபகரிப்பது என்பது சட்டவிரோதமான செயல். அதற்காக அவர் நில அபகரிப்பு வழக்கு தொடரலாம். 

காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்தாரா? வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்வது கட்சியின் வேலை இல்லை இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவரின் நிலத்தை அபகரித்து விட்டார்கள் என்றால் சட்ட ரீதியில் செல்வதை விட்டுவிட்டு ஏன் கட்சியை இதில் இழுக்கிறார்கள் என புரியவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம், யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம். அப்படி கட்சியிலிருந்து விலகுவதாக இருந்தால் தாராளமாக செல்லட்டும்.

20 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன் என்று சொன்னால் உங்கள் பங்களிப்பிற்கு நன்றி என சொல்லிக் கொள்கிறேன், வாழ்த்துக்கள்! அவர் சொன்ன நில பிரச்சனை புகார் எல்லாம் காவல் நிலையத்தில் கொடுத்தால் நல்லது" என கவுதமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP rama srinivasan response to gauthami allegation


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->