அதிமுகவுக்கு பாஜக விடுத்த நேரடி எச்சரிக்கை..? ராம சீனிவாசன் பரபர ட்விட்.!! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அதிமுக கூட்டணி தொடர்பாக பிரபல வார இதழுக்கு கொடுத்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில்யில் "2019 மக்களவைத் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களை பாஜக உடன் கூட்டணி வைத்துத் தான் அதிமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இப்போது கூட்டணி இல்லை என்கிறார்கள். பசு தோல் போர்த்திய புலி போல இருந்தால் அதைப் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பொதுமக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

தமிழ்நாட்டில் இப்போது இஸ்லாமியர் வாக்குகள் 13%ஆக உள்ளது. இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் 13% இஸ்லாமிய வாக்குகளைப் பெறுவதே எடப்பாடி பழனிசாமிக்குக் கடினம்..

கடந்த காலங்களில் பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுக. இப்போது கூட்டணி இல்லை என்கிறது. பாஜக உடன் கூட்டணிக்கு வராவிட்டால் வரும் காலங்களில் அதிமுக அரசியல் ரீதியாக வருத்தப்பட வேண்டி இருக்கும். இங்கு அனைவரும் பாஜகவைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள். அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும்" என பேட்டியளித்திருந்தார்.

 

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ராம சீனிவாசன் கூறியுள்ள இத்தகைய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்படுள்ளதாக ராம சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் தந்த பேட்டி பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

எந்த இடத்திலும் நான் அண்ணா திமுகவை குறை சொல்லியதில்லை சில அரசியல் எதார்த்தங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது என்பதாகத்தான் எனது கருத்து இருந்தது... தொடர்ந்து ஊடகங்களில் அண்ணா திமுக கூட்டணி வேண்டும் என்றும் அவர்கள் எங்கள் கொள்கை கூட்டாளிகள் என்றும் பேசி வருபவன் நான். இது போன்ற சர்ச்சைகளுக்கு எனது இந்த பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" என விளக்கமளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Rama srinivasan explain Aiadmk comment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->