தமிழக அரசை கண்டித்து பாஜக இன்று போராட்டம்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசை கண்டித்து இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதலால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக இன்று காலை 10 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட்டுள்ளது. மேலும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP protests today against Tamil Nadu government BJP leader Annamalai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->