புதுச்சேரியில் ராகுல் காந்தி படம் எரிப்பு..! பாஜகவினர் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal



பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்துக்களை இழிவு படுத்தியதாக கூறி புதுச்சேரியில் பாஜக இளைஞரணியினர் ராகுல் காந்தியின் உருவப் படத்தை எரித்தும், கிழித்தும் போராட்டம் நடத்தி உள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு, 

மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். அப்போது அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதையடுத்து இந்துக்கள் அனைவரும் வெறுப்பை வளர்க்கின்றனர். வன்முறையை தூண்டுகின்றனர் என்று ராகுல் காந்தி இந்துக்களை இழிவாகப் பேசியுள்ளதாகக் கூறி ராகுல் காந்தி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  புதுச்சேரியில் உள்ள பாஜக இளைஞர் அணியினர் புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியின் உருவப் படத்தை பாஜக இளைஞரணியினர் கிழித்தும், நெருப்பு வைத்து கொளுத்தியும் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதையடுத்து அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை, புதுச்சேரி போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். முன்னதாக போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protest By Burning Rahul Gandhi Photo in Puducherry


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->