திமுக என்றால் குடும்ப அரசியல், வசூல், கட்டப் பஞ்சாயத்துத்து - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தமிழக வந்துள்ள ஜே.பி.நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில், நேற்று காரைக்குடியில் ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்,

இலக்கியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்திற்கு வந்துள்ளேன். கடந்த 2 நாட்களில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளேன். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக என்றால் குடும்ப அரசியல், வசூல், கட்டப் பஞ்சாயத்துத்து. மாநில உரிமைப் பற்றி பேசுகின்ற திமுக தமிழ் மொழிக்காக என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP national leader JP natta speech about DMK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->